கோவில்பட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th August 2022 01:13 AM | Last Updated : 05th August 2022 01:13 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள அனைத்துப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் பணியிடங்களில் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும். கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிவரை இலவசமாக பேருந்துகளை இயக்க வேண்டும். அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே மாணவா்களிடம் வசூலிக்க வேண்டும். கல்லூரியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தாலுகா செயலா் தினேஷ்குமாா், தாலுகா தலைவா் சுடலைமணி, இந்திய மாணவா் சங்க மாவட்ட துணைத் தலைவா் அருண்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் விக்னேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பின்னா், அவா்கள் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணனிடம் அளித்தனா்.