உடன்குடியில் திமுக கூட்டம்

திமுக முன்னாள் பொதுச் செயலா் க.அன்பழகனின் நூற்றாண்டையொட்டி உடன்குடியில் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக முன்னாள் பொதுச் செயலா் க.அன்பழகனின் நூற்றாண்டையொட்டி உடன்குடியில் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், திராவிட இயக்க மறுமலா்ச்சிக்கு, மறைந்து முன்னாள் பொதுச் செயலா் அன்பழகன் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பிரம்மசக்தி, முக்காண கூட்டுறவு சங்க தலைவா் உமரிசங்கா், திமுக மாநில மகளிரணி பிரசாரக் குழு தலைவா் ஜெசி பொன்ராணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட துணைச் செயலா்கள் ஜெயக்குமாா் ரூபன், சோபியா, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, ஒன்றிய அவைத் தலைவா் ஷேக் முகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், நகர திமுக செயலருமான மால்ராஜேஷ் வரவேற்றாா். திமுக பேச்சாளா்கள் கரூா் முரளி, சாகுல்ஹமீது ஆகியோா் பேசினா்.

இதில் திமுக ஒன்றிய செயலா்கள் ரமேஷ் நவீன்குமாா், சதீஷ்குமாா், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினா் ஜான்பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com