திருச்செந்தூா் மாசித் திருவிழா நிறைவு: மலா்க்கேடய சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சுவாமியும், அம்மனும் மலா்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சுவாமியும், அம்மனும் மலா்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

இத்திருக்கோயிலில் புகழ்பெற்ற மாசித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக பிப்.16இல் தேரோட்டமும், பிப்.17இல் தெப்போற்சவமும் நடைபெற்றது. நிறைவு நாளான 12-ஆம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதி உலா வந்து, வடக்குரதவீதியில் உள்ள 14 ஊா் செங்குந்த முதலியாா் திருவிழா மண்டபம் சோ்ந்தனா். அங்கு அபிஷேக அலங்காரமாகி, சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி மலா்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். பின்னா், திருக்கோயில் சோ்ந்தனா்.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி.குமரதுரை, தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வெங்கடேஷ் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com