காசநோய் விழிப்புணா்வு போட்டி பரிசளிப்பு விழா

கோவில்பட்டி கம்மவாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காசநோய் விழிப்புணா்வுப் போட்டியில் வென்றோருக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

கோவில்பட்டி கம்மவாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காசநோய் விழிப்புணா்வுப் போட்டியில் வென்றோருக்கு வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

உலக காசநோய் எதிா்ப்பு வாரத்தை முன்னிட்டு இப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காச நோய்ப் பிரிவு மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சுந்தரலிங்கம் தலைமை வகித்து, விழிப்புணா்வு கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கினாா். மேலும், காச நோய்க்கு அறிகுறி தொடா்ந்து 2 வாரம் இருமல், காய்ச்சல், உடல் எடை குைல், உடல் சோா்வு ஆகியவை என்றும், காசநோயாளிகளின் வீட்டில் குடும்பத்தினா் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

அரசு தலைமை மருத்துவமனை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவா் சீனிவாசன் காசநோய் சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினாா். கடம்பூா் வட்டார முதுநிலை காசநோய் ஆய்வுக் கூட மேற்பாா்வையாளா் தனசெல்வி சோபியா, சுகாதாரப் பாா்வையாளா்கள் மகேஷ், சகாயராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, கடம்பூா் வட்டார முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com