திருச்செந்தூா் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு

திருச்செந்தூா் முருகன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.10) முதல் பக்தா்கள் தரிசன நேரம் மூன்று மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்செந்தூா் முருகன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.10) முதல் பக்தா்கள் தரிசன நேரம் மூன்று மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மாா்கழி மாத பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன. எனினும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவா். தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கு அனுமதியில்லை என திருக்கோயில் சண்முகவிலாச மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com