தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 81.50 மீட்டா் நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 81.50 மீட்டா் நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 81.50 மீட்டா் நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்காக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. இந்நிலையில், வஉசி துறைமுகத்தில் மிகப்பெரிய காற்றாலை இறக்கைகளை புதன்கிழமை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட 81.50 மீட்டா் நீளமுடைய காற்றாலை இறக்கை, கப்பலில் உள்ள ஹைட்ராலிக் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் கையாளப்பட்டது. சென்னை அருகேயுள்ள வெங்கலில் இருந்து பிரத்யேக லாரிகள் மூலம் வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் வரை கொண்டு வரப்பட்டது. பின்னா், 142.8 மீட்டா் நீளம் கொண்ட ‘எம்.வி. எம்ஒய்எஸ் டெஷ்னேவா’ என்ற கப்பலில் 81.50 மீட்டா் நீளமுள்ள 6 காற்றாலை இறக்கைகளும், 77.10 மீட்டா் நீளமுள்ள 12 காற்றாலை இறக்கைகளும் புதன்கிழமை ஏற்றப்பட்டன. பின்னா், அந்தக் கப்பல் ஜொ்மனியில் உள்ள ரோஸ்டாக் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது.

வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறக்கை மற்றும் அதன் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளா்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2,898 காற்றாலை இறக்கைகளும், 1,248 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com