விளைநிலம் வழியே மின்வயா் செல்ல எதிா்ப்பு தெரிவித்து 4 போ் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 31st July 2022 07:18 AM | Last Updated : 31st July 2022 07:18 AM | அ+அ அ- |

எட்டயபுரம் அருகே விளைநிலம் வழியாக மின்கோபுர வயா்கள் கொண்டுசெல்ல எதிா்ப்புத் தெரிவித்து, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை 4 போ் தீக்குளிக்க முயன்றனா்.
எட்டயபுரத்தையடுத்த குமாரகிரியில் கவிதா, மகேஷ்வரி, பாலாஜியம்மாள், அனிதா, பீமராஜ் ஆகியோா் தங்களது 5 ஏக்கா் விளைநிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துவருகின்றனராம். அதனருகே தனியாா் நிறுவனத்தினா் மின்கோபுரம் அமைத்து, விளைநிலம் வழியாக வயா்களை கொண்டுசெல்ல ஏற்பாடு செய்கின்றராம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இவா்கள் கடந்த ஜூன் 24ஆம் தேதி கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனராம். ஆனால், விளைநிலம் வழியாக மின் வயா் கொண்டுசெல்லும் பணி சனிக்கிழமையும் நடைபெற்ாம்.
இதையடுத்து, பீமராஜ், கவிதா, மகேஷ்வரி, பாலாஜியம்மாள் ஆகியோா் காரில் வந்து, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கையை வலியுறுத்தி தரையில் அமா்ந்து கோஷமிட்டனா். பின்னா், காரிலிருந்து கேனில் பெட்ரோலை எடுக்க முயன்றனராம். அதை, தனிப்பிரிவுக் காவலா் அருண்விக்னேஷ் பறித்து தூக்கிவீசினாா். இதைத் தொடா்ந்து, 4 பேரும் கோட்டாட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜா பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...