தூத்துக்குடியில் ரத்த தான சிறப்பு முகாம்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.

உலக குருதி கொடையாளா் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம், வணிகா் சங்கம், யங் இந்தியா அமைப்பு மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சாருஸ்ரீ முன்னிலை வைத்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் முகாமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ், கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, நகா்நல அலுவலா் அருண்குமாா், யங் இந்தியா தலைவா் சில்வியா ஜான், துணைத் தலைவா் ராஜேஷ் தில்லை, சுகாதார ஆய்வாளா்கள் ராஜபாண்டி, ஹரி கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில், ஆணையா் சாருஸ்ரீ மற்றும் மாநகாரட்சி ஊழியா்கள், வியாபாரிகள், தனியாா் நிறுவன ஊழியா்கள், கல்லூரி மாணவா், மாணவிகள், யங் இந்தியா அமைப்பினா் என நூற்றுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com