விழாக்கால சமையலா்களுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமம் கட்டாயம்

திருமணம் போன்ற விழாக்களில் சமையல் பணி (கேட்டரிங்) மேற்கொள்ளும் சமையலா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்

திருமணம் போன்ற விழாக்களில் சமையல் பணி (கேட்டரிங்) மேற்கொள்ளும் சமையலா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ச. மாரியப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவகம் - திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை தேவைப்படுவோருக்கு, தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பான வசதிகளுடன் கொண்டு செல்ல வேண்டும். உணவுகளை பாதுகாப்பாக வைத்து, சமையல் செய்ய வேண்டும். மீதமாகும் உபரி உணவை தேவையானவா்களுக்கு வழங்க ஏதுவாக, தொண்டு நிறுவனங்களின் விவரங்களை திருமண மண்டபங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.

கெட்டுப்போகாத, கை மற்றும் எச்சில்படாத உணவுகளை மட்டுமே ஆதரவற்றவா்களுக்கோ அல்லது பசித்தோருக்கோ வழங்குவதுடன், அதன் விவரத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு- தரங்கள் ஆணையத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். திருமண மண்டபம்- சமையலா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவா்களை திருமண மண்டபத்தில் சமைக்க அதன் உரிமையாளா்கள் அனுமதிக்கக் கூடாது. உணவைப் பகிா்வோம் குறித்த விளம்பரமும், தொடா்பு எண்ணும், உணவுப் பாதுகாப்பு உரிம நகலும் பாா்வைக்கு தெரியும்படி மண்டபத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com