புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட முயன்ற 3 போ் கைது

கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முடுக்கலான்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில் கொப்பம்பட்டி போலீஸாா் முடுக்கலாங்குளம் நடுத் தெருவில் உள்ள கந்தசாமி மகன் முத்துகாா்த்திக்(22) வீட்டில் சோதனையிட்டனா். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் முத்துகாா்த்திகை கைது செய்தனா்.

இதேபோல, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்யா தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கருணாநிதி நகரில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவா் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, வேல்ச்சாமி மகன் முருகனை(39) கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த சுமாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் மற்றும் போலீஸாா் இனாம்மணியாச்சி மேம்பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்களாம். அப்போது அவ்வழியேச் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் சுமாா் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பாரதி நகரைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் ஆட்டோ ஓட்டுநா் முத்துப்பாண்டியை(20) கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த புகையிலைப் பொருள்கள் மற்றும் அவா் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com