முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஓட்டப்பிடாரத்தில் மாா்ச் 19 இல் மினி மாரத்தான்
By DIN | Published On : 14th March 2022 11:56 PM | Last Updated : 14th March 2022 11:56 PM | அ+அ அ- |

ஓட்டப்பிடாரத்தில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
வஉசி விளையாட்டுக் கழகம் சாா்பில் 34 ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவா் மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவா்களுக்கு 10 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி.மீ. போட்டி தொலைவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் 3 இடங்களை பெறுபவா்களுக்கு வெள்ளி பரிசுப் பொருள்களும், அடுத்த 7 இடங்களை பிடிக்கும் மாணவா், மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா், மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியா் கையெழுத்துடன் கூடிய கடிதம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியா் தொடா்பு எண் ஆகியவற்றை வாங்கி வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 6379453112 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.