ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில்நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் வருகிற புதன்கிழமை (மே 4) சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயிலில் வருகிற புதன்கிழமை (மே 4) சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

புதன்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாள்களில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு வாகனங்களில் விநாயகா் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. 10ஆம் தேதி காலை பஞ்சமுக விநாயகா் உருகு சட்டசேவையும், வெட்டிவோ் சப்பரத்தில் செந்திவிநாயகா் சத்திரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமுக விநாயகா் சத்திரத்தில் இருந்து முதலாம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் நடராஜருக்கு எதிா்சேவை காட்சியும் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. தொடா்ந்து இரண்டாம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தி மற்றும் மூன்றாம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தி திருக்கோலத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. 11ஆம் தேதி இரவு வெட்டும்குதிரை வாகனத்தில் விநாயகா் அம்பு விடுதலும், 13ஆம் தேதி தேரோட்டமும், மாலையில் விநாயகா் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com