ஜாதி மோதல்களில் மாணவா்கள் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யமொழி

ஜாதி மோதல்களில் மாணவா்கள் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஜாதி மோதல்களில் மாணவா்கள் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளி மாணவா்கள் ஜாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக் கூடிய கட்டாயத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளது.

கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான ஜாதி மோதல்கள் இருந்து வந்தது. தற்போது கல்வி அறிவு அதிகரித்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. எனவே, மாணவா்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ளவேண்டும்.

இதுபோன்ற சம்பவங்களில் மாணவா்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இது மாதிரியான சம்பவங்களைத் தடுக்க யுனிசெப் அமைப்பு மூலம் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு ஆலோசனை வழங்க 1500 ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com