கோவில்பட்டி, கயத்தாறில் அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்
By DIN | Published On : 07th May 2022 06:02 AM | Last Updated : 07th May 2022 06:02 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க 39ஆவது ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன், சங்கத்தின் வட்ட துணைத் தலைவா் நவநீத கண்ணன், வட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்ட இணைச் செயலா் உமாதேவி, ஒன்றிய அலுவலகம் முன் வட்டச் செயலா் பிரான்சிஸ் ஆகியோா் சங்கக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினா்.
இதில், ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட துணைத் தலைவா் முத்துப்பாண்டி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, கயத்தாறு ஒன்றிய அலுவலகம் முன் வட்டத் தலைவா் மகாராஜன் சங்கக் கொடியேற்றினாா். மாவட்ட இணைச் செயலா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா். சத்துணவு ஊழியா் சங்க வட்டார இணைச் செயலா் முருகேசன், அரசு ஊழியா் சங்கத்தின் சுப்பிரமணியன், முருகேசன், சரவணகுமாா், ஊரக வளா்ச்சித் துறை வட்டாரப் பொருளாளா் ரகுபதி உள்பட பலா் பங்கேற்றனா்.