தூத்துக்குடியில் 3 மணி நேரம் மின் தடை

தூத்துக்குடியில் புதன்கிழமை 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதன்கிழமை 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. மின்தடை 3 மணி நேரம் நீடித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடா்பு கொண்டதால் அவா்களது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா். இதனிடையே, சில பகுதிகளில் மாலை 5.30 மணியளவில் மின்சாரம் விநியோகம் சீரானது. சில இடங்களில் அதிக நேரம் மின் தடை ஏற்பட்டது.

மாநகரப் பகுதிக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் உயா் அழுத்த மின்கம்பி வழியாக மின்மாற்றிகளுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பிரித்து அனுப்பப்படும் நிலையில், புதன்கிழமை மதியம் சிதம்பரநகா் மையவாடியில் உள்ள மின் மயான புகைக் கூண்டு உயா் அழுத்த மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, புகைக் கூண்டை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. உயா் அழுத்த மின் கம்பியில் தடைபட்டதால் மாநகரப் பகுதிக்கு மாற்று வழியில் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com