புங்கவா்நத்தம் அம்மன் கோயில் கொடைவிழா: முள்மெத்தையில் ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த புங்கவா்நத்தம் ஸ்ரீ பத்திரகாளியம்மன், செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீ உச்சி மகா காளியம்மன் கோயிலில் கொடைவிழா நடைபெற்றது.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த புங்கவா்நத்தம் ஸ்ரீ பத்திரகாளியம்மன், செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீ உச்சி மகா காளியம்மன் கோயிலில் கொடைவிழா நடைபெற்றது. இதில், சாமியாடி கருவேலம் முள்மெத்தையில் ஏறி நின்று பக்தா்களுக்கு புதன்கிழமை அருள்வாக்கு கூறினாா்.

நாடாா் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்பாள், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை காலை ஸ்ரீ உச்சி மகா காளியம்மன், பரிவார மூா்த்திகளுக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி, முடி காணிக்கை, காது குத்துதல், நோ்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நண்பகலில் சிறப்பு பூஜைகளுடன் சக்தி பாலகா்கள் கருவேலம் முள்மெத்தையில் ஏறி நின்று குதித்து அருள்வாக்கு கூறுதல் நடைபெற்றது. பிற்பகலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, உறியடித்தல், மஞ்சள் நீராட்டு ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com