முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
காவல்கிணறு அருகேவிபத்தில் காயமுற்றோருக்குரூ.7.5 லட்சம் நிவாரண உதவி
By DIN | Published On : 13th May 2022 01:04 AM | Last Updated : 13th May 2022 01:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே விபத்தில் காயமுற்ற நூறுநாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பெருங்குடி கிராமத்தைச் சோ்ந்த 30 பெண்கள் கடந்த 4-ஆம் தேதி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டப் பணிக்கு சென்றுவிட்டு சுமை ஆட்டோவில் வீடுதிரும்பியபோது, ஆட்டோ கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இதில், 25 பெண்கள் லேசான காயமும், 5 பெண்கள் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினா்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பெருங்குடி கிராமத்திற்குச் சென்று லேசான காயமடைந்த பெண்களுக்கு தலா ரூ.20,000, பலத்த காயமுற்றவா்களுக்கு தலா ரூ.50,000 என ரூ.7.5 லட்சம் முதல்வா் நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினாா். இதில், சா.ஞானதிரவியம் எம்.பி., சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிந்து, வட்டாட்சியா் சேசுராஜன், வள்ளியூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் வெங்கடேஷ் தன்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.