நான்குனேரி பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா காரணமாக இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. நிகழாண்டு இத்திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பெருமாளுக்கும், திருவரமங்கைதாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வந்தன. சுவாமி தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து காட்சியளித்தாா்.

7ஆம் நாளான திங்கள்கிழமை (மே 9) சுவாமி தாயாருடன் தங்கச் சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெற்றது. 10ஆம் நாளான வியாழக்கிழமை காலையில் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பெருமாள்-தாயாா் தேரில் எழுந்தருளினாா்.

தேரோட்டத்தை நான்குனேரி மதுரகவி வானமாமலை ராமானுஜா் ஜீயா் சுவாமிகள் வடம்பிடித்துத் தொடக்கிவைத்தாா். தோ் ரத வீதியை வலம் வந்து, பிற்பகலில் நிலையை அடைந்தது. பின்னா், பெருமாள்-தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com