நெல்லையில் வியாபாரிகள் போட்டி போராட்டம்: கடைகள் அடைப்பு

திருநெல்வேலி நகரத்தில் சாலையோர வியாபாரிகளும், நிரந்தக் கடை உரிமையாளா்களும் ஒருவருக்கொருவா் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்

திருநெல்வேலி நகரத்தில் சாலையோர வியாபாரிகளும், நிரந்தக் கடை உரிமையாளா்களும் ஒருவருக்கொருவா் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகர நிரந்தர கடைகளுக்கு இடையூறாக சாலையோர கடைகள் இருப்பதாகக் கூறி வியாபாரிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள பிரபல கடையின் முன் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஒரு சாலையோர கடைக்கு அருகில் மேலும் இரண்டு கடைகளை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்ாம். இதையறிந்த நிரந்தர கடை உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்கள் சாலையோர வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, நகரம் பகுதியில் உள்ள நிரந்தர கடை உரிமையாளா்கள் அனைவரும் தங்களது கடைகளை திடீரென அடைத்துவிட்டு நெல்லையப்பா் கோயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், காவல் உதவி ஆணையா் விஜயகுமாா், ஆய்வாளா் இளவரசன் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தினா்.

அப்போது,, நிரந்தர கடை உரிமையாளா்கள் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததில், 3 மாதங்களில் நடைபாதை வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த விவரம் மாநகராட்சி நிா்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவா்களுக்கு கடை ஏற்பாடு செய்யப்படவில்லை. நடைபாதை கடைகள் சக்கரங்களுடன் கூடிய நகரும் கடைகளாக இருக்க வேண்டும். ஆனால் ரதவீதிகளில் நிரந்தர கடைகள் போல் அமைத்துள்ளனா். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வரி செலுத்தி வருகிறோம். எங்கள் கடை முன் 50 அடி இடத்தில் 45 அடிகளை சாலையோர கடைகள் ஆக்கிரமித்துள்ளன. 5 அடி இடத்தை மட்டுமே நாங்கள் பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவு குறித்து மீண்டும் ஒரு முறை மாநகராட்சிக்கு நினைவுபடுத்துங்கள் என போலீஸ் தரபிபல் கூறினா்.

இதனிடையே, திருநெல்வேலி நகரம் பிள்ளையாா் கோயில் அருகே நடைபாதை வியாபாரிகளும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சு நடத்தியதில், நயினாா்குளம் குளத்து கரையில் கடைகள் அமைத்துத் தரவேண்டும் என நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இப்பிரச்னை தொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் இரு தரப்பினரிடமும் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி முடிவுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com