திருச்செந்தூரில் பேரிடா் மீட்புப் பயிற்சி

திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மீட்புப் பயிற்சி நடைபெற்றது.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மீட்புப் பயிற்சி நடைபெற்றது.

திருச்செந்தூா் வட்டத்துக்கு உள்பட்ட தன்னாா்வலா்களுக்கு நடைபெற்ற பயிற்சிக்கு, திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன் தலைமை வகித்து, பேரிடா் மீட்பு குறித்துப் பேசினாா். காயாமொழி வட்டார மருத்துவ அலுவலா் மொ்வினோ தேவதாசன், தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலா் நட்டாா் ஆனந்தி, வட்ட வழங்கல் அலுவலா் சங்கராநராயணன் முன்னிலை வகித்தனா்.

கிராமம்வாரியாக தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்நிலை மீட்பாளா்களுக்கு (தன்னாா்வலா்கள்) பேரிடா் காலங்களில் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, தீயணைப்பு மீட்புப் பணித் துறை, பொது சுகாதாரத் துறை பயிற்றுநா்கள் மூலம் பயிற்சி, செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டன. வருவாய் ஆய்வாளா் மணிகண்டன்வேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com