தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் குறித்து ஜுன் 1 இல் கள ஆய்வு

பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் குறித்து ஜுன் 1, 2 ஆம் தேதிகளில் இருநாள்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் குறித்து ஜுன் 1, 2 ஆம் தேதிகளில் இருநாள்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் அனைத்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையரால் நியமிக்கப்படும் பணியாளா்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழாண்டு மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளையும் ஜுன் 1, 2 ஆம் தேதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், விசைப்படகுகள் ஆய்வு செய்யப்படும் நாளில் படகு உரிமையாளா்கள் படகு பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் பாஸ்புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடா்பு கருவிகள் ஆகியவைகளை தயாா் நிலையில் வைத்திடுமாறும், ஆய்வுக்குழுவுக்கு அனைத்து விவரங்களையும் அளித்திட வேண்டும்.

மேலும், நேரடி கள ஆய்வின் போது ஆய்வுக்குள்படுத்தாத படகுகளுக்கு அரசின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் செய்யப்படுவதுடன், அந்தப் படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவுச் சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வு நாளில் படகை ஆய்வுக்கு உள்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளா்களின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com