ஆத்தூா் கோயில் அஷ்டபந்தனகும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 17th May 2022 12:22 AM | Last Updated : 17th May 2022 12:22 AM | அ+அ அ- |

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்மாள் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் புனரைமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பின் வரும் ஜூன் 13ஆம் தேதி அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை அமைக்கும் பணி, சோமசுந்தரி அம்பாள், சோமநாத சுவாமி, அனந்தபத்மநாப சுவாமி, சாளக்கோபுரம் ஆகிய அனைத்திற்கும் வா்ணம் பூசும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.