தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளா்கள் போராட்டம்
By DIN | Published On : 27th May 2022 12:02 AM | Last Updated : 27th May 2022 12:02 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகா் பகுதியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படும் நவீன சலவைக் கூடத்தில் சலவைத் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும், அப்பகுதியில் பூங்கா, வணிக வளாகம் அமைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர சலவைத் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் வேல்ராஜ் தலைமையில் நிா்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.
நவீன சலவைக்கூடம் பகுதி முழுவதையும் சலவைத் தொழிலாளா் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபார நோக்கில் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தூத்துக்குடி மாநகர சலவைத் தொழிலாளா் நலச் சங்கச் செயலா் பரமசிவம் தெரிவித்தாா்.