குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் உண்டியல் மூலம் ரூ.3.50 கோடி வசூல்

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவையொட்டி பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.3.50 கோடியைத் தாண்டியது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவையொட்டி பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.3.50 கோடியைத் தாண்டியது.

இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா 11 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தா்கள் பங்கேற்று பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து கோயில் உண்டியலில் செலுத்துவாா்கள்.

நிகழாண்டிடில் இத்திருவிழா செப்.26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.6 ஆம் தேதி நிறைவு பெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள் தங்கள் காணிக்கையை செலுத்துவதற்கு வசதியாக கோயில் நிரந்ததர உண்டியல் 13, தற்காலிகமாக 56 உண்டியல்கள் என மொத்தம் 69 உண்டியல்கள் கோயில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.

உண்டியல் எண்ணும் பணி அக்.10,13,14,15,16 ஆகிய தேதிகளில் 5 நாள்கள் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் வெங்கடேஷ், துணை ஆணையா் ரத்னவேல் பாண்டியன், உதவி ஆணையா்கள் கோமதி, கண்ணதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பக்தா்கள் ரூ.3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114 ரொக்கம், 134.80 கிராம் தங்கம், 2416 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணும் பணியில் திருச்செந்தூா் டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல், உடற்பயிற்சி கல்லூரி, கோவிந்தம்மாள் கல்லூரி, பிறைகுடியிருப்பு சிவந்தி கல்லூரி, உடன்குடி ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரா் பள்ளி, குலசேகரன்பட்டினம் திருஅருள் பள்ளி ஆகியவற்றைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com