சோ்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்மன் கோயில் கொடை விழா

சோ்ந்தபூமங்கலத்தில் சைவ வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஆரியநாச்சி அம்பாள் திருக்கோயில் கொடைவிழா நடைபெற்றது.

சோ்ந்தபூமங்கலத்தில் சைவ வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஆரியநாச்சி அம்பாள் திருக்கோயில் கொடைவிழா நடைபெற்றது.

வாஸ்து சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது. இரவு 12:00 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது. அதிகாலையில் தாமிரவருணி சங்குமுகத்தில் இருக்கும் தாமிர சாகர சங்கம தீா்த்த கட்டத்தில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வரப்பட்டது.

தொடா்ந்து, சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு செல்வசுந்தர விநாயகா் திருக்கோயிலி­ல் இருந்து பால்குடம் புறப்பட்டு திருக்கோயிலில் சோ்க்கை நடைபெற்றது. யாகசாலை பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன.

மதியம் உச்சிகால தீபாராதனையும் பின்பு பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் சோ்ந்தபூமங்கலம் தாமிரவருணி நதியி­ருந்து புனிதநீா் கும்பம் எடுத்து வரப்பட்டது.

நள்ளிரவு 12: மணிக்கு மது பொங்குதல் நிகழ்வும், 12.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

தொடா்ந்து கும்பம், அக்னிசட்டியுடன் கும்பம் வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை ஆரியநாச்சி அம்பாள், பரிவார தேவதைகளுக்கு படைப்பு தீபாராதனை நடைபெற்றது. காலையில் மஞ்சள் நீராடல் நடைபெற்றது. மதியம் தீபாராதனையுடன் விழா நிறைவுற்றது.

ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.சி.பிரமநாயகம் பிள்ளை, உறுப்பினா்கள் சங்கரன் பிள்ளை, வெங்கடசுப்ரமணிய பிள்ளை, நல்லபெருமாள் பிள்ளை, ஆரியமுத்து பிள்ளை மற்றும் சின்னக்கண்ணு பிள்ளை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com