கொட்டங்காடு கோயிலில் புரட்டாசித் திருவிழா தொடக்கம்

உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் புரட்டாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது.

உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் புரட்டாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது.

இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் 10 நாள்கள் நடைபெறும் புரட்டாசித் திருவிழா நிகழாண்டு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, காலை 8.30 மணிக்கு அருள்மிகு பவளமுத்து விநாயகா், அம்மன், சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. செப்.14 ஆம் தேதி காலை 6 மணிக்கு யானை மீது கொடிப்பட்ட ஊா்வலம்,9 மணிக்கு கொடியேற்றம், அன்னதானம், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, அம்பாள் உள்பிரகார சப்பர பவனி நடைபெறுகிறது.

விழா நாள்களான செப்.15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அன்னதானம், வில்லிசை நடைபெறும். செப். 22 ஆம் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். செப்.23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடா்ந்து அம்மன், பவளமுத்து விநாயகா் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா பெ.சுந்தரஈசன் மற்றும் விழாக்குழுவினா், ஊா்மக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com