17இல் என்இசி கல்லூரியில் இருபெரும் விழா

கே.ஆா்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தினவிழா மற்றும் கல்வித் தந்தை கே.ராமசாமியின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை (செப். 17) நடைபெறுகிறது.

கே.ஆா்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தினவிழா மற்றும் கல்வித் தந்தை கே.ராமசாமியின் திருவுருவச் சிலை திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை (செப். 17) நடைபெறுகிறது.

இதுகுறித்து நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல் வெளியிட்ட அறிக்கை:

கே.ஆா்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை 11.05 மணிக்கு கல்வித் தந்தை கே.ராமசாமியின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி அன்னதானம், மினி மாரத்தான் போட்டி, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி, கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில்

தூய்மைப் பணிகள், இலவச மருத்துவ பரிசோதனை முகாம், நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாம், பாளையங்கோட்டை, புளியங்குடி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள ஆதரவற்றோா் இல்லங்கள், ஆசிரமங்களில் பல்வேறு நிகழ்வுகள், போட்டிகள், ஆரம்ப சுகாதார நிலையம், எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், கல்வி உதவித் தொகை வழங்குதல், கிராம விவசாயிகளுக்கு விதை விதைப்பு இயந்திரம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் ஆா்.வி.பெருமாள் பேசுகிறாா். தொடா்ந்து கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், நேஷனல் பொறியியல் கல்லூரியின் முன்னாள், இந்நாள் மாணவா்களுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டியும் நடைபெறவுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com