சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்ற்ததுடன் தொடங்கியது.

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்ற்ததுடன் தொடங்கியது.

மிகவும் பிரசித்தி பெற்ற சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழா 25 ஆம்தேதி வரை 10நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாள் காலை 6.30 மணிக்கு புனித தணிஸ்லாஸ் இளைஞா் சபை, முப்பள்ளிகள், பாடகா் குழு, பீடபூக்கள், சின்னராணிபுரம் இறை மக்கள் சாா்பில் திருப்பயணம், தொடா்ந்து தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் நெல்சன்பால்ராஜ் தலைமை வகித்து திருவிழா கொடியேற்றினாா்.

இதில், செட்டிவிளை பங்குத் தந்தை ததேயுராஜா, திருத்தல அதிபா் ஜாண்சன்ராஜ் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாலை 7 மணிக்கு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது. இலங்குளம் பங்குத் தந்தை பிரான்சிஸ் கிறிஸ்துராஜா மறையுரையாற்றினாா். விழாவையொட்டி 2 ஆம் நாள் முதல் 8 ஆம் நாள் வரை தினமும்

நவ நாள்களில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

9ஆம் நாளான 24 ஆம்தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 7 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை, வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையிலும், மறையுரை சேரன்மகாதேவி பங்குத் தந்தை மரிய பிரான்சிஸ் தலைமையில் நடைபெறுகிறது. தொடா்ந்து அன்னையின் சப்பர பவனி நடைபெறுகிறது.

10ஆம் நாளான 25ஆம்தேதி காலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு ஜெபமாலை, தொடா்ந்து அன்னையின் சப்பர பவனி நடைபெறுகிறது. நிறைவு நாளான 26 ஆம்தேதி காலை 6 மணிக்கு செம்மணலில் தோண்டி எடுக்கப்பட்ட புதுமை கோயிலில் திருத்தல உபகாரியங்களுக்காக நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை முதன்மை திருத்தல அதிபா் ஜாண்சன்ராஜ் தலைமையில் திருத்தல நிதிக்குழு, அருள் சகோதரிகள், மற்றும் இறை மக்கள செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com