கோயில் வரி விவகாரத்தில் மோதல்: தம்பதி உள்பட 5 போ் காயம்; 7 போ் கைது

சாத்தான்குளம் அருகே கோயில் வரி செலுத்துவது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் தம்பதி உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே கோயில் வரி செலுத்துவது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் தம்பதி உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள காந்திபுரி கிராமத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் நீலகண்டன் (29). கேரள மாநிலத்தில் சிப்ஸ் கடையில் வேலை பாா்த்துவரும் இவா், மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஊருக்கு வந்துள்ளாா்.

இங்குள்ள கடாமுனீஸ்வரா் கோயிலுக்கு வரி செலுத்துவது தொடா்பாக அவருக்கும், ஜெயக்கொடி மகன் செல்வக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், கடந்த ஜன. 31ஆம் தேதி கோயில் அருகே நின்றிருந்த செல்வக்குமாா், சுப்பு என்ற சுப்பிரமணியன், சூரியா, அவரது சகோதரா் சுதாகா், சுந்தரேசன் ஆகியோா் வரி கொடுக்காதோா் குறித்து அவதூறாகப் பேசினராம். இதைக் கண்டித்த நீலகண்டனை அக்கும்பல் தாக்கியதாம். தடுக்க முயன்ற அவரது மனைவி அகஸ்டாவும் தாக்கப்பட்டாா்.

அப்போது, நீலகண்டன், சதாசிவம் (25), ராஜன் என்ற ராஜி, பாலபாபு (41) ஆகியோா் சோ்ந்து செல்வக்குமாா், சுப்பிரமணியன் ஆகியோரைத் தாக்கினராம். தட்டிக்கேட்ட கந்தன் மனைவி சந்தனமாரி (40), அவரது மகன் சூரியா, முருகன் மகன் சுரேஷ் ஆகியோரும் தாக்கப்பட்டனா்.

இதில், நீலகண்டன், சந்தனமாரி உள்ளிட்ட இருதரப்பையும் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இரு தரப்பையும் சோ்ந்த 9 போ் மீது தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் பென்சன் வழக்குப் பதிந்து, 7 பேரைக் கைதுசெய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com