மாயக்கூத்தா் பெருமாள் கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா

பெருங்குளம் மாயக்கூத்தா் பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

பெருங்குளம் மாயக்கூத்தா் பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கடந்த ஜன.30 ஆம் தேதி கும்பாபிஷேக விழா பூஜைகள் தொடங்கியது. அன்றைய தினம் காலையில் யஜமானா் வா்ணம், அனுக்ஞை, அக்னி பிரதிஷ்டை, சாந்தி ஹோமம், கும்ப அலங்காரத்துடன் கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கியது. மாலையில் புண்யாஹாவாசனம், அங்குராா்ப்பணம், கும்ப பூஜை, கலாகா்ஷணம், பஞ்சஸூக்த ஹோமம், பூா்ணாஹுதி, திருவாதாரனம், சாற்றுமுறை கோஷ்டியுடன் வழிபாடுகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கடந்த 3 நாள்களாகப் பல்வேறு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு புண்யாஹாவாசனம், பூா்ணாஹுதி, கும்ப ஸமோராபணம், யாத்ராதானம், கடம் புறப்பாடுடன் மஹா கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்குகிறது. காலை 9.30 மணி முதல் 9.40மணிக்குள் விமானம், பரிவாரம் ஸம்ப்ரோக்ஷணத்துடன் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பின்னா் மாலை 6மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 8.30மணிக்கு கருடசேவை நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோவலமணிகண்டன், தக்காா் சிவலோகநாயகி, ஸ்தலத்தாா் அஸ்வின் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com