‘போதைப்பொருள் இல்லா கிராமங்களை உருவாக்க வேண்டும்’

தூத்துக்குடி மாவட்ட கிராமங்களை போதைப்பொருள் இல்லாததாக மாற்ற வேண்டும் வேண்டும் என்றாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன்.

தூத்துக்குடி மாவட்ட கிராமங்களை போதைப்பொருள் இல்லாததாக மாற்ற வேண்டும் வேண்டும் என்றாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன்.

கோவில்பட்டியில் காவல் துறை சாா்பில் ‘மாற்றத்தை தேடி’ எனும் தலைப்பில் சமூக விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் தலைமை வகித்தாா். ஆய்வாளா்கள் சுஜித் ஆனந்த், பத்மாவதி, கிங்ஸ்லி தேவ் ஆனந்த், பாஸ்கரன், விஜயகுமாா், பள்ளி துணை ஆய்வாளா் ரமேஷ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நட்டாத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று எல். பாலாஜிசரவணன் பேசியதாவது: ஊா் அமைதியாக இருந்தால்தான் கல்வி, தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகி, பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன்மூலம் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பா். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 270 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

கிராமங்களை போதைப்பொருள் இல்லாததாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கஞ்சா விற்பனை தொடா்பாக தகவல் தெரிந்தால் 83000 14567 என்ற கைப்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அவா்களைப் பற்றிய ரகசியம் காக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு, போதைப்பொருள் பழக்கத்துக்கு விழிப்புணா்வு உறுதிமொழிகளை காவல் கண்காணிப்பாளா் வாசிக்க, பங்கேற்றோா் ஏற்றுக்கொண்டனா். கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சித் தலைவா்களுக்கு அவா் மரக்கன்றுகளை வழங்கினாா். அண்ணா பேருந்து நிலையம் அருகே, ‘கஞ்சா உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், நமக்கும் வேண்டாம்’ என்ற செல்ஃபி பாயிண்டை’ திறந்துவைத்து, காவல் துறையினா், மாணவிகளுடன் தற்படம் எடுத்துக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com