‘மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது’

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் டி.ஆா்.தமிழரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் டி.ஆா்.தமிழரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் பட்ஜெட்டில் தனி நபா் வருமான வரி உச்ச வரம்பு நீடிப்பு, சிறு,குறு தொழில் முனைவோருக்கான கடன் உத்தரவாதம் ரூ.9,000 கோடி ஒதுக்கீடு, கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு, மீனவா்கள் நலனுக்கு ரூ.6,000 கோடி துணைத் திட்டம், சிறுதானிய சேமிப்பு கிடங்கு, நகா்ப்புற உள்கட்டமைப்புக்கு ரூ.10,000 கோடி, ரயில்வே திட்டத்துக்கு ரூ.2.4 லட்சம் கோடி, 50 புதிய விமான நிலையங்கள், ஏகலைவன் பள்ளித் திட்டத்தில் ஆசிரியா் நியமனம் ஆகியவை வரவேற்கத்தக்கது.

மேலும், 30 சா்வதேச திறன் இந்தியா மையங்கள் திட்டம், மூத்த குடிமக்களுக்கு சேமிப்புத் திட்ட உச்சவரம்பு நீடிப்பு, பெண்களுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம், கைப்பேசி, டிவி போன்ற முக்கிய மின் சாதனங்களுக்கு வரிகுறைப்பு, 5 ஜி சேவைக்கான ஆய்வகங்கள் தொடங்குவது என மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் வரவேற்கத்தக்கவை எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com