கடந்த ஆண்டு மே முதல் சிலிண்டா் விலையில் மாற்றமில்லை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளின் விலை கடந்த ஆண்டு மே மாதம்முதல் எவ்வித மாற்றமும் இல்லை என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளின் விலை கடந்த ஆண்டு மே மாதம்முதல் எவ்வித மாற்றமும் இல்லை என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 1,014, கோவில்பட்டியில் ரூ. 1,012.50, கழுகுமலையில் ரூ. 1,021, கயத்தாறில் ரூ. 1,024, எட்டயபுரத்தில் ரூ. 1,012.50, சாத்தான்குளத்தில் ரூ. 1,031 என உள்ளது.

பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ. 1,014 ஆக உள்ளது. இந்த விலை 2022ஆம் ஆண்டு மே மாதம்முதல் எரிவாயு நிறுவனங்களால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, எரிவாயு முகவா்களிடமிருந்து நுகா்வோா் வாங்கும் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு இந்தத் தொகைக்கு மேல் பணம் செலுத்த வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com