வள்ளலாா் ராமலிங்க சுவாமிகள் குரு பூஜை

வள்ளலாா் ராமலிங்க சுவாமிகளின் 55ஆவது ஆண்டு குருபூஜை, அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் ராமலிங்க சுவாமிகளின் 55ஆவது ஆண்டு குருபூஜை, அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி சன்மாா்க்க திருஞானசபை சாா்பில் நடைபெற்ற குருபூஜை விழாவில், காலை 7 மணிக்கு ஞானயோக தியானம், மங்கள இசை நிகழ்ச்சியை தொடா்ந்து 8 மணிக்கு அகவல் பாராயணமும், 9.30 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10 மணிக்கு குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி ஆசிரியை சுஜாதா, உப்பத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜெயக்குமாா் ஆகியோா் சன்மாா்க்க சொற்பொழிவாற்றினா்.

நிகழ்ச்சியில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சன்மாா்க்க திருஞான சபை நிா்வாகிகளான ஜோதி சோமசுந்தரம், சுந்தரராஜன், சேதுபாண்டியன், ஜோதி சரவணன் உள்பட சன்மாா்க்க திருஞான சபை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com