‘உப்பளத் தொழிலாளா்களுக்கு பிப். 6, 7இல் மருத்துவ முகாம்கள்’

தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளா்களுக்கு பிப். 6, 7இல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளா்களுக்கு பிப். 6, 7இல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றாா், ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உப்பளத் தொழிலாளா்களுடன் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். தொடா்ந்து, உப்பளங்களைப் பாா்வையிட்ட அவா், தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து, குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அவா் கூறியது:

தமிழ்நாட்டிலேயே இம்மாவட்டத்தில்தான் அதிகமாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. மாநிலத்தின் 70 சதவீத உப்பு உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் அமைப்புசாரா தொழிலாளா்களாக உள்ளனா்.

இத்தொழிலாளா்களுக்கு தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் முறையாக கிடைக்கிா என ஆய்வு செய்தேன். இந்த நிவாரணம் பெற தொழிலாளா் நலத் துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதோருக்கு அட்டை வழங்கவும், ஆதாா் எண் இணைக்கவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உப்பளங்களில் அடிப்படை வசதி செய்யவும், ஏற்கெனவே அடிப்படை வசதியுள்ள உப்பளங்களில் அவற்றை முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உப்பளத் தொழிலாளா்களுக்கு, மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, அமைப்புசாரா தொழிலாளா் துறை முயற்சியுடன் சங்கர நேத்ராலயா போன்ற தனியாா் மருத்துவமனைகளுடன் இணைந்து 9 இடங்களில் பிப். 6, 7ஆகிய 2 நாள்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. கண், ரத்த அழுத்தம், பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்படும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், தேவைப்படுவோருக்கு கண் கண்ணாடிகள் வழங்குவது உள்ளிட்ட சேவைகளும் நடைபெறும் என்றாா் அவா்.

வட்டாட்சியா் செல்வக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com