கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு விருது

அகில இந்திய அளவிலான வேளாண்மை ஆராய்ச்சியில் சிறந்த ஆய்வுக்குழுவிற்கான விருதை கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பெற்றுள்ளது.
கோவை ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தா் கீதாலட்சுமி ஆகியோரிடமிருந்து விருதைப் பெறுகிறாா் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா்- ஆய்வுக்குழு முதன்மை

கோவில்பட்டி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகமானது, புதுதில்லியின் நிதி உதவியுடன் 1971 முதல் மானாவாரி விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக (2018 - 2022) ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், செயல் விளக்கங்கள், விவசாயிகளுக்கான வேளாண் பயிற்சிகள், வயல் விழாக்கள், ஆராய்ச்சி பதிப்பு- வெளியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வுக்குழுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் இந்த ஆராய்ச்சிக் கழகம் தோ்ந்தெடுக்கப்பட்டது.

இதையொட்டி, கோயம்புத்தூா் மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தா் கீதா லட்சுமி ஆகியோா் முன்னிலையில் கோவில்பட்டி அகில இந்திய மாணவா் வேளாண்மை திட்டத்திற்கான சிறந்த குழு விருது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 53ஆவது நிறுவன நாளில் வழங்கப்பட்டது. விருதை கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத் தலைவா் -ஆய்வுக் குழு முதன்மை விஞ்ஞானி பாஸ்கா், சக விஞ்ஞானிகளான மனோகரன், சஞ்சீவ் குமாா், மணிகண்டன், குரு ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com