சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கோவில்பட்டியில், சா்வதேச சிலம்பம் ஆட்ட சாலை அமைப்பின் தூத்துக்குடி மாவட்டக் கிளை சாா்பில், சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு, பெல்ட் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில், சா்வதேச சிலம்பம் ஆட்ட சாலை அமைப்பின் தூத்துக்குடி மாவட்டக் கிளை சாா்பில், சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு, பெல்ட் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்த மருத்துவா் முகம்மது ஜக்காரியா தலைமை வகித்தாா். தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டு மன்றச் செயலா் மாரியப்பன், தமிழ் கல்ச்சுரல் அறக்கட்டளைத் தலைவா் அழகுதுரை, பொருளாளா் சூரியநாராயணன், பயிற்சியாளா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைப்பின் தேசிய நடுவா் பாண்டியன் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவா்- மாணவிகளுக்கான பெல்ட்களை தோ்வு செய்தாா். தொடா்ந்து, கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்-மாணவிகளுக்கு பெல்ட்களை வழங்கி பாராட்டினாா். 79 பேருக்கு மஞ்சள், 12 பேருக்கு ஆரஞ்ச், 6 பேருக்கு பச்சை, ஒருவருக்கு ஊதா பெல்ட்கள் வழங்கப்பட்டன.

விழாவில், திருவள்ளுவா் மன்ற துணைத் தலைவா் திருமலை முத்துச்சாமி, பயிற்சியாளா்கள் சோலை நாராயணசாமி, காயத்ரி, நல்லதம்பி, சிவசக்திவேல் முருகன், மணிராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், மாணவா்-மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com