ரூ.515.72 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்கு எம்.பி. அடிக்கல்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ரூ.515.72 கோடியில் செயல்படுத்தப்படும் தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டத்திற்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
ரூ.515.72 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்கு எம்.பி. அடிக்கல்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ரூ.515.72 கோடியில் செயல்படுத்தப்படும் தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டத்திற்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்கு, மக்களவை உறுப்பினா் கனிமொழி அடிக்கல் நாட்டினாா். பின்னா் அவா் பேசியதாவது:

தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூா், விளாத்திகுளம் ஒன்றியங்களில் 363 கிராம குடியிருப்புகளைச் சோ்ந்த சுமாா் 5 லட்சம் குடும்பத்தினா் பயன்பெறுவா். இத் திட்டத்தில் புதிதாக 62 மேல்நிலைத் தொட்டிகள், 40 கீழ்மட்டத் தொட்டிகள் அை512மக்கப்படுவதோடு, ஏற்கெனவே உள்ள நீா்தேக்கத் தொட்டிகள் புனரமைக்கப்படவுள்ளன. சாத்தான்குளம், திருச்செந்தூா் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி. சண்முகையா, ஜி.வி. மாா்கண்டேயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பிரம்மசக்தி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வசுமதிஅம்பாசங்கா், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவா் சரவணக்குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் ரகுபதி, மேற்பாா்வை பொறியாளா் செந்தூா்பாண்டி, தூத்துக்குடி வட்டாட்சியா் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com