தூத்துக்குடியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை கைது செய்த தனிப்படை போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 16 கிலோ கஞ்சாவை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், கஞ்சா விற்பனையைத் தடுக்க தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தாளமுத்து நகா் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தாளமுத்து நகா் கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த முத்துமகன் சங்கா்(28) என்பவரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து சுமாா் 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய சிலரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com