கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொருள்கள் எடுத்துச் செல்லப்படும் பணியை தொடங்கி வைக்கும் உதவி தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான ஜேன் கிறிஸ்டிபாய், உடன் வட்டாட்சியா்கள் சரவணப்பெருமாள், நாகராஜன், காவல்துணை கண்காணிப

மக்களவைத் தோ்தலையொட்டி கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட 286 வாக்குச்சாவடிகளும் வாக்குப்பதிவுக்கு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்டவை போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இப் பணியை, உதவி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான ஜேன் கிறிஸ்டிபாய் தொடக்கி வைத்தாா். காவல் துணை கண்காணிப்பாளா் வெங்கடேஷ், வட்டாட்சியா்கள் சரவணப் பெருமாள் (கோவில்பட்டி), நாகராஜன் (கயத்தாறு), சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் தங்கையா, துணை வட்டாட்சியா்கள் கோவிந்தராஜ், வெள்ளைச்சாமி, திரவியம் மற்றும் காவல் துறையினா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 1412 அலுவலா்களுக்கு, நியமன ஆணைகள் நாடாா் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா்

தலைமையில் 2 காவல் துணை கண்காணிப்பாளா்கள் உள்பட 500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com