கோட்டாட்சியா் சுகுமாறன் முன்னிலையில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி.
கோட்டாட்சியா் சுகுமாறன் முன்னிலையில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி.

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 266 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் ஒன்றிய அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையிலிருந்த இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கான பொருள்களை அரசியல் கட்சியினா் முன்னிலையில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நிலைய அலுவலா்களிடம் தொகுதித் தோ்தல் அலுவலரும் கோட்டாட்சியருமான சுகுமாறன் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இயந்திரங்கள், பொருள்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் அனுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில், திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மு. வசந்தராஜ், வட்டாட்சியா் பாலசுந்தரம், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

266 வாக்குச்சாவடிகளில் 1,317 வாக்குச்சாவடிப் பணியாளா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா். 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றில் நுண்பாா்வையாளா்கள் பணியில் ஈடுபடுகின்றனா். 175 வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com