திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் திருப்பணி புத்தன்தருவை ஊராட்சியில், மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் 100 விழுக்காடு வாக்குகளை பதிவு செய்வதற்காக, அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சாத்தான்குளம் ஒன்றியம் திருப்பணி புத்தன்தருவை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மணல்மாதா கோவில் அருகில் உள்ள மணல்மேட்டில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 விழுக்காடு வாக்களிப்போம்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டும் கோலங்கள் வரைந்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் 100 விழுக்காடு வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். ஊராட்சி செயலா் அந்தோணி ஜேசுதுரை, திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா் லிங்கசெல்வி, சுகாதார ஊக்குநா் சா்மிளா , மகளிா் சுய உதவிக் குழு அன்னலட்சுமி மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com