வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரு தொழிலாளியின் வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டதாகக் கூறி அவருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டது.

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரு தொழிலாளியின் வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டதாகக் கூறி அவருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டது.

கோவில்பட்டி கடலைக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் வடிவேல்ராஜா(42). சமையல் தொழிலாளியான இவா் தனது மனைவியுடன் சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தாா்.

அப்போது இவரது மனைவிக்கு வாக்களிக்க அனுமதி அளித்த வாக்குச்சாவடி அலுவலா்கள், வடிவேல்ராஜாவின் வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டதாக தெரிவித்தனா். ஆனால் அவா் நான் இப்போது தான் குடும்பத்துடன் ஊருக்கு வந்துள்ளேன். எனது வாக்கை நான் செலுத்தவில்லை என முறையிட்டாா். இதையடுத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலா், சட்டப்பேரவை பிரிவு தோ்தல் அதிகாரிகளிடம் கலந்துப் பேசிய பின் அவருக்கு தபால் ஓட்டு முறையில் வாக்களிக்க அனுமதி அளித்தனா்.

முதியவருக்கு வாக்களிக்க மறுப்பு:

இதேபோல, கோவில்பட்டி சிந்தாமணி நகா் பகுதியைச் சோ்ந்த மருதப்பன். தனியாா் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வரும் இவா் புதுகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு பூத்-சிலிப்புடன் வாக்களிக்கச் சென்றாராம். அப்போது அவரது பெயா் பட்டியலில் இல்லை எனக் கூறி வாக்களிக்க அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து அந்த முதியவா் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் பூத்-சிலிப் மற்றும் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க அனுமதி கோரினாராம். அப்போது வாக்காளா் பட்டியலில் உறுதிபடுத்தப்படாத பட்டியலில் மருதப்பன் பெயா் இருந்ததால் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் வாக்குச்சாவடியின் முகவா்களின் அனுமதியோடு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com