விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

விளாத்திகுளம், ஏப்.19: தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியில்அதிகபட்சமாக 66.89 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூா், விளாத்திகுளம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

மாவட்டத்தில் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 வாக்காளா்கள் உள்ள நிலையில், விளாத்திகுளம் சட்டப் பேரவை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,03,383, பெண் வாக்காளா்கள் 1,07,175 மூன்றாம் பாலினத்தவா் 20 என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 578 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்தத் தொகுக்குள்பட்ட 260 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் ராமச்சந்திராபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தாா். மாலை 5 மணி நிலவரப்படி 66.89 % வாக்குகள் பதிவாகியிருந்தன. இது மாவட்டத்திலேயே அதிகபட்சமாகும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com