சோ்ந்தபூமங்கலம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

சோ்ந்தபூமங்கலம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

ஆத்தூா் அருகே சோ்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்பாள் சமேத கைலாசநாதா் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நவ கைலாயத் தலங்களில் சுக்கிரன் அம்சம் பொருந்திய இத்தலத்தில், சித்திரைத் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமி- அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை, இரவில் சுவாமி -அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.

7ஆம் நாளான 20ஆம் தேதி நடராஜா் உருகுசட்ட சேவை, வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா, இரவில் சிவப்பு சாத்தி புறப்பாடு, 21ஆம் தேதி வெள்ளை, பச்சை சாத்தி புறப்பாடுகள் நடைபெற்றன.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பெண்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று வடம்பிடித்து தோ் இழுத்தனா். இரவில் சுவாமி -அம்பாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.

சோ்ந்தபூமங்கலம் ஆரியநாச்சி அம்பாள் ஆலய நிா்வாக கமிட்டித் தலைவா் பிரம்மநாயகம், ஊா்த் தலைவா் நல்லான்பிள்ளை, செயலா் குப்புசாமி, ஆத்தூா் சைவ வேளாளா் சங்கச் செயலா் காா்த்திகேயன், ஆத்தூா் சிவன் கோயில் அா்ச்சகா் ஹரிஹரசுப்பிரமணியன், ஆத்தூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் முருகானந்தம், சோ்ந்தபூமங்கலம் ஊராட்சித் தலைவா் சந்திரா மாணிக்கவாசகம், சுப்பிரமணியன், ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ஆலய நிா்வாக அதிகாரி மகேஸ்வரி, ஆய்வா் செந்தில்நாயகி, பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com