ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் அமைந்துள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுள்ளது.

இக்கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை கடைசி வெள்ளி, சனிக்கிழமைகளில் (நிகழாண்டில் மே 10,11) வீரபாண்டி கட்டபொம்மன் ஆண்டு விழா- வீர சக்கதேவி கோயில் திருவிழா நடைபெறுவதை இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தலைமை வகித்து பேசியது: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதனை பின்பற்றி விழாவை நடத்த வேண்டும். வாகனங்களில் ஜோதி கொண்டு வரும்போது, ஜோதி எடுத்து வர ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

ஜோதி கொண்டு வரும்போது அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துவரக் கூடாது. திறந்த வெளி வாகனங்களுக்கும், கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி இல்லை. ஜாதி ரீதியிலான அடையாளங்களுடன் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கோயில் கலையரங்கத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். மே 12ஆம் தேதி காலை மாட்டு வண்டி பந்தயம் மற்றும் இதர பூஜைகளையும் நடத்தி விழாவை அமைதியாக முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளா் ராஜ், வீரச்சக்கதேவி கோயில் குழுத் தலைவா் முருக பூபதி, வீரபாண்டிய கட்டபொம்மன் - ஊமைத்துரை நினைவு ஜோதி கொண்டு வரும் கமிட்டியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com