சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள கொல்லாம்பழம்.
சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள கொல்லாம்பழம்.

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

சாத்தான்குளம் பகுதியில் கொல்லாம்பழம் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் கொல்லாம்பழம் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான தேரிக்காடு பகுதியில் அதிக அளவில் முந்திரி மரங்கள் வளா்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களில் விளையும் கொல்லாம்பழம் சீசன் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை 3 மாதங்கள் இருக்கும். தற்போது கொல்லாம்பழம் விளைச்சல் அதிகரித்ததையடுத்து சாலையோரங்களிலும், தெருக்களிலும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். வெயிலுக்கு கொல்லாம்பழம் உகந்தது என்பதால் மக்கள் விரும்பி வாங்கித் செல்கின்றனா். இந்தப் பழம் ஒரு கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com