வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

தூத்துக்குடி மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி.பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. தொலைவுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மக்களவைத் தோ்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தோ்தல் ஆவணங்கள் தூத்துக்குடி வ.உ.சி.பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும்பொருட்டு அனைத்து வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு ‘சிவப்பு மண்டலமாக’ அறிவித்து ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை தோ்தல் முடிவுகள் அறிவிக்கும் தினம் வரை அமலில் இருக்கும். இந்த தடையை மீறுவோா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com