கட்டாரிமங்கலம் கோயிலில் 
காரைக்கால் அம்மையாா் குருபூஜை

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி, சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. முற்பகலில் அபிஷேகம், நண்பகலில் சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜைகள், பின்னா் அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா். மாலையில், சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள், விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை, நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com