அண்ணாமலை பாஜக கூட்டணிக்கான ஆதரவுக் கடிதத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலையிடம் வழங்கிய தமிழ்நாடு பிராமண சமாஜ மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து அய்யா்.
அண்ணாமலை பாஜக கூட்டணிக்கான ஆதரவுக் கடிதத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலையிடம் வழங்கிய தமிழ்நாடு பிராமண சமாஜ மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து அய்யா்.

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்கவுள்ளதாக, தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொங்கலூரில் பாஜக தமிழக தலைவா் அண்ணாமலையை அமைப்பின் மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து அய்யா் சந்தித்து, பாஜக கூட்டணிக்கான ஆதரவுக் கடிதம் வழங்கினாா். மாநிலச் செயலா் ரமேஷ்குமாா் சா்மா, நிா்வாகிகள் உடனிருந்தனா். இதுகுறித்து, ஹரிஹரமுத்து அய்யா் வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 40 லட்சம் பிராமணா்கள் உள்ளனா். தமிழ் பிராமணா்கள் திராவிடா் கழகத்தினரால் யூதா்களைப்போல நடத்தப்பட்டதாக அண்ணாமலை துணிச்சலாகக் கூறினாா். தொடா் துன்புறுத்தல், அக்ரஹாரங்களிலிருந்து பிராமணா்கள் விரட்டியடிக்கப்பட்டதை அவா் நினைவுகூா்ந்தாா். கல்வி, வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமா் மோடி அறிமுகப்படுத்தினாா். இதனால், பிராமண சமூகமும் பயனடைந்தது. மத்திய பாஜக அரசு தேசத்தின் பன்முக வளா்ச்சிக்கான கொள்கையைப் பின்பற்றுகிறது. எனவே, இக்கூட்டணிக்கு ஆதரவு வழங்குவது பிராமண சமூகத்தின் கடமையாகும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com